News December 27, 2025
JUST IN குமரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்ட திருவிழா ஜனவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழாவினை முன்னிட்டு வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். அதற்கு ஈடாக ஜனவரி 10 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News December 28, 2025
குமரி: மரத்தில் டூவீலர் மோதி இளைஞர் பலி!

தக்கலை அருகே மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் அகில்ராஜ் (23). பள்ளியாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் நேற்று முன் தினம் அழகியமண்டபம் அருகே பிலாங்கால் பகுதியில் டூவீலரில் வந்தபோது நிலைதடுமாறி மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சிக்கிய அகில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News December 28, 2025
குமரி: போதையில் நேர்ந்த சோகம்!

புதுக்கடை விரிவிளை பகுதி கொத்தனார் செல்வராஜ் (60) நேற்று (டிச.27) மது போதையில் மனைவியுடன் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், போதையில் வீட்டு கண்ணாடி ஜன்னலை கையால் உடைத்தார். இதில் கையில் பலத்த காயம் அடைந்து அவர் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்ற போது பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறினார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தினர்.
News December 28, 2025
குமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

கன்னியாகுமரி மாவட்ட இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவனையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


