News October 25, 2025
JUST IN: ஈரோடு மக்களுக்கு எச்சரிக்கை

கடந்த வாரம் பெய்த மழையால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான எட்டியது. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஈரோடு காவிரி கரையோரம் உள்ள மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல பொதுப்பணித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
ஈரோடு: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே<
News October 25, 2025
ஊராட்சி செயலாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.
News October 25, 2025
ஈரோடு: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் ஒருவர் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடமிருந்து தீபாவளி சீட்டு நடத்தி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாகவும் மற்றும் தலைமறைவு ஆகிவிட்டார் எனவும் நேற்று அப்பகுதி பொதுமக்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேரில் வந்து புகார் மனுக்களை அளித்தனர். தங்கள் பணத்தை மீட்டு தரவும், தலைமறைவாகியுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


