News September 18, 2025
JUST IN:வேலூர் மாவட்டத்தில் 8 போலி டாக்டர்கள் கைது

வேலூர் மாவட்டத்தில் எஸ்பி மயில்வாகனன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் இணைந்து போலி மருத்துவர்களை கண்டறிய இன்று (செப்டம்பர் 18) திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் 8 நபர்கள் போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ சாதனங்களை பறிமுதல் செய்த போலீசார் 8 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 12, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை டிஜிட்டல் அரெஸ்ட்!

வேலூர்: “கைது வாரண்ட்” இருப்பதாகக் கூறி ஆன்லைனில் மிரட்டிப் பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடிகளிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வேலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. எந்தவொரு காவல் அதிகாரியும் போன் மூலம் பணம் கேட்கமாட்டார்கள். இத்தகைய அழைப்புகள் வந்தால் உடனடியாகத் துண்டித்து விட்டு, 1930 என்ற எண்ணில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 12, 2026
வேலூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

வேலூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 12, 2026
வேலூர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


