News December 19, 2025
JUST IN:திருவள்ளூரில் 6.19 லட்சம் பேர் நீக்கம்

இன்று (டிச.19) திருவள்ளூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வரைவு வாக்காளர் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 6,19,777 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 22,69,499 வாக்காளர்கள் உள்ளனர் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
திருவள்ளூர்: டிகிரி இருக்கா? BOI-ல் placement

1. BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
திருவள்ளூர்: செவிலியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு Apollo MedSkills மூலம் செவிலியர் (Nursing) திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. தேர்வான மாணவர்களுக்கு Parent Hospital-களில் OJT பயிற்சியும், ரூ.5,000/-ஊக்கத்தொகையும் வழங்கப்படும். 2022-2025 ஆண்டுகளில் B.Sc/GNM முடித்தவர்கள் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
News December 31, 2025
ஆவடியில் நடைபெறும் மருத்துவ முகாம்

திருவள்ளூர்: ஆவடி மாநகராட்சி சார்பில் (ஜன.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மேலும் இதில் பல்துறை மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ் சேவைகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.


