News June 18, 2024
முடி உதிர்வதை தடுக்க இதை செய்யுங்கள் போதும்!

உடல் உஷ்ணம் காரணமாக ஏற்படும் முடி உதிர்வை தடுக்க கற்றாழை சாறு பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். குன்றா இளமையை அளிக்கும் பண்புகள் நிறைந்த கற்றாழையின் தோல் நீக்கி, அதன் சோற்றை (பசை போகும்வரை கழுவி) பசும்மோரில் இஞ்சி, சீரகம், இந்துப்பு சேர்த்து அரைத்தால் கற்றாழை சாறு தயார். இதை காலையில் வெறும் வயிற்றில், காலையில் இந்த சாற்றை 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம்.
Similar News
News March 13, 2026
84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஒப்படைப்பு

இந்திய பெருங்கடலில் சென்ற <<19303157>> ஈரான் போர் கப்பலை<<>> அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. இதில் 84 மாலுமிகள் உயிரிழந்த நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 60 பேரின் நிலை பற்றி இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் 84 பேரின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களின் உடல்கள் ஈரான் கொண்டு செல்லப்பட உள்ளன.
News March 13, 2026
கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி: EPS

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் திமுகவின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என EPS சாடியுள்ளார். <<19370719>>கனிமொழியை <<>> அச்சிறுமியின் உறவினர்கள் விரட்டி அனுப்பியதே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் <<19364920>>போராட்டத்தை <<>> NDA கூட்டணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.


