News March 17, 2024
சற்றுமுன்: விஜய் முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நடத்தை விதி உடனே அமலுக்கு வந்துள்ளது. இதனால் தவெகவின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். நாள்தோறும் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் குறித்து தொண்டர்கள் பரப்புரை செய்யவுள்ளனர்.
Similar News
News October 25, 2025
LIC-யால் மோடியின் நண்பர்களுக்கே நன்மை: கார்கே

LIC-யால் பலனடைவது பாலிசிதாரர்கள் இல்லை, மோடியின் நண்பர்களே என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதானி குழுமத்தில் <<18102060>>LIC<<>> ₹33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடியின் நண்பரின் பாக்கெட்டை நிரப்ப, 30 கோடி பாலிசிதாரர்களின் பணத்தை சுரண்டுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகர் காலமானார்.. PM மோடி இரங்கல்

பாலிவுட் பழம்பெரும் <<18101845>>நடிகர் சதிஷ் ஷா<<>>(74) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்கின் உண்மையான ஜாம்பவானாக சதிஷ் ஷா என்றும் நினைக்கூரப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நகைச்சுவையால் எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்தவர் என புகழாரம் சூட்டிய மோடி, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP
News October 25, 2025
RO-KO: ஓய்வா? திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!

ரோஹித் – கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தால், இந்தியாவை அசைக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதுதானே சராசரி இந்திய ரசிகர்களுக்கு வேண்டியது. நீண்டநாள்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக விளையாடி, தனித்தனியாக வென்றுள்ளனர். ஓய்வு குறித்த தகவல் வெளியாகும் நேரத்தில் ரோஹித் சதமும், கோலி அரைசதமும் விளாசியுள்ளனர். தங்களுக்குள் இன்னும் ஃபயர்
இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.


