News April 27, 2024

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஜப்பானில் சற்றுமுன் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போனின் தீவு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மத்திய டோக்கியோவில் உணரப்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Similar News

News November 14, 2025

பிஹார் தேர்தல் முடிவு: எந்த நேரத்திலும் மாற்றம்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. NDA – 91 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா (MGB) கூட்டணி 63 இடங்களிலும், ஜன்சுராஜ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பாக, NDA கூட்டணி வேட்பாளர்கள் பலர் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.

News November 14, 2025

தேஜஸ்வி யாதவ் முன்னிலை

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார். இந்த தொகுதியில் பாஜக சார்பாக சதீஸ் குமார் என்பவர் வேட்பாளராக உள்ளார். ஆனால் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 80-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

News November 14, 2025

பிஹார் தேர்தல்.. பாஜக முன்னிலை

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நொடிக்கு நொடி மாற்றம் நிகழ்கிறது. ஜேடியூ – பாஜக கூட்டணி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நேர நிலவரப்படி, BJP -39, JDY -30, LJP(RV) 3 என மொத்தம் 72 இடங்களில் NDA கூட்டணியும், RJD – 33, cong – 8, CPI (ML) 3 என MGB கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

error: Content is protected !!