News March 19, 2024

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 130 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 6.3ஆக பதிவான நிலநடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 11, 2026

உங்கள் இன்ஸ்டா தரவுகள் திருடப்பட்டதா?

image

1.7 கோடி <<18821444>>இன்ஸ்டாகிராம்<<>> பயனர்களின் மின்னஞ்சல், தொலைப்பேசி எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த தகவல் உண்மையில்லை என Meta நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. புதிய தரவு மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அங்கீகரிக்கப்படாத Login முயற்சிகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் Meta விளக்கமளித்துள்ளது.

News January 11, 2026

IND Vs NZ ODI: இந்தியா பவுலிங்!

image

இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டில் டாஸ் வென்ற இந்தியா, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான அணி, மைக்கேல் பிரேஸ்வேல் தலைமையிலான அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசி., அணி, 3 ODI & 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?

News January 11, 2026

கடையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் வாங்குறீங்களா? BIG DANGER!

image

இஞ்சி பூண்டு பேஸ்ட்டை காசை கொடுத்து கடையில் வாங்கி, உங்களுக்கு நீங்களே சூனியம் வைத்துக்கொள்கிறீர்களா? ஆம், பாக்கெட்டில் வரும் இந்த பேஸ்டுகளில், இஞ்சி பூண்டை விட எண்ணெய், உப்பு, மைதா, கெமிக்கல் அதிகமாக இருப்பதாக சமையல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், அஜீரணக் கோளாறு, ஃபுட் பாய்சன் என பல பிரச்னைகள் ஏற்படும் என்பதால், வீட்டிலேயே இதனை அரைத்து பயன்படுத்துங்கள் மக்களே. SHARE.

error: Content is protected !!