News January 6, 2025
குரு வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பின்னோக்கி நகரக்கூடிய வக்ர நிலையில் சஞ்சாரம் செய்கிறார். பிப்ரவரி 4 முதல் மீண்டும் முன்னோக்கி நகரத் தொடங்க உள்ளார். இதனால் மேஷம், கன்னி, விருச்சிகம், மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், தொழிலில் வெற்றியையும் அள்ளித்தருவார் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். வேலையிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, சமூகத்தில் மரியாதை கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.
Similar News
News January 20, 2026
‘ஜன நாயகன்’ மறு ஆய்வுக்கு கால தாமதம் ஆனது ஏன்?

‘ஜன நாயகன்’ பட சென்சார் பிரச்னை தொடர்பான வழக்கு உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு ஆய்வு செய்வது குறித்து எத்தனை நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மறு ஆய்வுக்கு 20 நாள்களில் குழு அமைக்க வேண்டும் என சென்சார் போர்டு விளக்கம் அளித்தது. மேலும் மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்க மறுத்தால் ஐகோர்ட்டை நாடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
News January 20, 2026
PM KISAN திட்ட தொகையை உயர்த்த மத்திய அரசு திட்டம்!

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 (ஆண்டுக்கு ₹6,000) வழங்கி வருகிறது. அதனை ஆண்டுக்கு ₹8,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக முதலில் தகவல் வெளியானது. தற்போது, ₹9,000 வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிப்.1-ல் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் PM KISAN திட்ட தவணைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பு வெளியாகலாம்.
News January 20, 2026
விஜய்யை சீண்டிய சிவி சண்முகம்

கார், பங்களா, வீடு தருகிறோம் என புதிதாக அரசியலுக்கு வந்த ஒருவர் கூறுகிறார். அதை ட்ரம்ப் கூட கொடுக்க மாட்டார் என விஜய்யை அதிமுகவின் சிவி சண்முகம் மறைமுகமாக சாடியுள்ளார். மேலும், இன்றைக்கு கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என பலர் வந்தாலும், ஒரே எம்ஜிஆர் எங்கள் எம்ஜிஆர் மட்டும்தான் எனவும், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா என சிந்தித்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.


