News April 9, 2025
குரு பெயர்ச்சி: ராஜயோகம் பெறும் 4 ராசிகள்

குரு, நாளை (ஏப்.10) மிருகசீரிடம் நட்சத்திரத்துக்கு பெயர்கிறார். இதனால் நன்மைகள் பெறும் 4 ராசிகள்: *சிம்மம்- வெற்றிகள் கிடைக்கும், நிதிநிலை, வியாபாரம் சிறக்கும். பணியில் மேன்மை *துலாம்- தேர்வுகளில் வெற்றி. சம்பளம் உயரலாம். ஏப்.10 முதல் ஜூன் 13-க்குள் நல்ல செய்தி. *தனுசு- குருவின் முழு ஆசி கிடைக்கும், படிப்பு, வேலையில் வெற்றி *கும்பம்- மகிழ்ச்சி, குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண மழை பொழியும்.
Similar News
News December 10, 2025
விஜய்க்கு சரியாக சொல்லி கொடுக்கவில்லை: நமச்சிவாயம்

புதுச்சேரியில் நேற்றைய மக்கள் சந்திப்பின் போது, அங்கு ரேஷன் கடைகளே இல்லை என விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு, 2016-ல் தற்காலிகமாக மூடப்பட்ட ரேஷன் கடைகள், 2024 முதல் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்க்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 10, 2025
உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.


