News December 20, 2024
வரும் 26 முதல் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் தொடர் ஆரம்பம்

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26-ஆம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக பேசிய TN கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா, இதுவரை தமிழகத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்களே, போட்டிகளில் கலந்துகொண்ட நிலையில், தற்போது வெளிமாநில மாணவர்களும் கலந்துகொள்வார்கள் என்றார். எதிர்காலத்தில் இந்த தொடரை தேசிய அளவில் கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 2, 2025
வாக்கு திருடர் சர்ச்சை: BJP Vs CONG

பாஜக வாக்குத்திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேராவிற்கு டெல்லியில் 2 EPIC நம்பர் இருப்பதாக போட்டோ வெளியிட்டு பாஜக விமர்சித்துள்ளது. ஆனால், தனது பெயரை நீக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும், இன்னும் ஏன் பெயர் இருக்கிறது என்பதை ECI விளக்க வேண்டும் என்றும் பவன் கேரா வலியுறுத்தியுள்ளார்.
News September 2, 2025
SCIENCE: உங்கள் மூளையை உங்கள் மூளையே சாப்பிடுமா?

தூங்காமல் இருப்பதால் நமது மூளை தன்னைத்தானே சாப்பிடுமா? மூளையில் உள்ள இறந்த செல்களை சாப்பிட(அகற்ற) microglia, astrocytes என இருவகை செல்கள் உள்ளன. போதுமான தூக்கம் இல்லாதபோது, இவை தீவிரமாக செயல்பட்டு மற்ற செல்களையும் கூட அகற்றலாம் என சந்தேகம் உள்ளது. எனினும், இது ஆய்வில் உறுதியாகவில்லை. எனினும் சில நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் டாக்டர்கள். நல்ல தூக்கமே இதற்கு சிறந்த மருந்தாகும். SHARE IT!
News September 2, 2025
PM மோடிக்கு முதலிடம்: விஜய் எத்தனையாவது தெரியுமா?

ஆகஸ்ட்டில் மிகவும் பிரபலமான இந்தியர்களின் பட்டியலில் விஜய் முக்கியமான இடத்தை பெற்றுள்ளார். X தள பதிவுகளின் அடிப்படையில் வெளியான சர்வேயில், PM மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதில், 3-வது இடம் பிடித்து விஜய் அசத்தியுள்ளார். ரஜினி 10-வது இடத்தில் உள்ளார். ஜுனியர் NTR(2), பவன் கல்யாண்(4), சுப்மன் கில்(5), ராகுல் காந்தி(6), விராட் கோலி(7), மகேஷ் பாபு(8), தோனி(9) ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.