News June 8, 2024
ஜூன் 8: வரலாற்றில் இன்று!

*1783 – இஸ்லாந்தில் உள்ள லாக்கி எரிமலை வெடித்த 8 மாதங்களில் வறட்சி, வறுமை ஏற்பட்டதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டுவீசி தாக்கின.
*1992 – முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.
*2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பிறகு வெள்ளிக் கோள் சூரியனைக் கடந்தது அவதானிக்கப்பட்டது.
Similar News
News September 24, 2025
தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்தின் உரிமை: ஐநா

ஐநா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன பிரச்னையை முதன்மையாக கொண்டு ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரெஸ் உரையாற்றினார். அதில் தனி நாடு அந்தஸ்து பாலஸ்தீனத்திற்கு நாம் வழங்கும் சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை என திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பரஸ்பர ஒத்துழைப்புடன் அண்டை நாடுகளாக வாழ வேண்டும் என கூறிய அவர், 1967 ஆம் ஆண்டு நிலவரப்படி எல்லைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
News September 24, 2025
சிவாஜி கணேசன் பொன்மொழிகள்

*வெற்றி என்பது கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் விளைவு
*கலை என்பது மனிதர்களுக்குள் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவி
*மக்களின் கைதட்டல்கள்தான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது
*வாழ்க்கை ஒரு நாடகம், அதில் நாம் அனைவரும் நடிகர்கள்
*ஒரு நடிகன் என்பவன், சமூகத்தில் நடப்பவற்றை அவனுடைய நடிப்பின் மூலம் பிரதிபலிப்பவன்
News September 24, 2025
வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத் PHOTOS

எமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் மூலம் பிரபலமானார். இவருக்கு ‘கண்ணம்மா’ என்ற பாடல் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது. இவர், தனது க்யூட்டான போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெட்கத்தில் சிவந்த ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஒரு லைக் போடுங்க.