News July 9, 2025
ஜூலை 9… வரலாற்றில் இன்று!

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.
Similar News
News July 9, 2025
B.Ed. சேர்க்கை விண்ணப்பம் இன்றுடன் நிறைவு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed. படிப்பிற்கான விண்ணப்பம் இன்றுடன் (ஜூலை 9) நிறைவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18-ல் தரவரிசை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 21-25 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28-ல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு, முதலாமாண்டு வகுப்புகள் ஆக.6-ல் தொடங்கவுள்ளன. விருப்பமுள்ள மாணவர்கள் இந்த லிங்கை <
News July 9, 2025
தமிழகத்தில் இன்று பஸ், ஆட்டோ ஓடுகிறதா? புது அப்டேட்

சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சற்று குறைந்த அளவில்(80%) அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவை, குமரி, திருப்பூர் மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பஸ்கள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. புதுச்சேரியில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் சற்று பாதிக்கப்பட்டுள்ளனர். புதுவையில் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
கணக்கு வாய்ப்பாடு.. பள்ளிகள் ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

6-ம் வகுப்பு மாணவர்களில் 53% பேருக்கு மட்டுமே 10-ம் வாய்ப்பாடு வரை மட்டுமே தெரிவது கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் & தனியார் என 74,229 பள்ளிகளில் 21.15 லட்சம் மாணவர்கள், 2.70 லட்சம் ஆசிரியர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம், மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனராம். உங்கள் கருத்து என்ன?