News July 28, 2024
ஜூலை 28: வரலாற்றில் இன்று!

*ஜூலை 28 – உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் *1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. *1972 – இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. *1984 – ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் யூனியன் கலந்து கொள்ளவில்லை.
Similar News
News March 21, 2026
தமிழக தேர்தலை நிறுத்தக் கோரி மனு.. காரணம் என்ன?

தமிழக தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் KK ரமேஷ் என்பவர் SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, போலீஸாரின் செயல்பாட்டில் திருப்தியில்லை உள்ளிட்ட காரணங்களை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதுவரை இம்மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழக பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23-ல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
சமரச பேச்சுவார்த்தை: CPM அலுவலகத்தில் வைகோ

சென்னை தி.நகரில் உள்ள CPM அலுவலகத்திற்கு வைகோ சென்றுள்ளார். தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து CPM வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சமரச பேச்சுவார்த்தை நடத்த வைகோ சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
News March 21, 2026
துரந்தர் 2: இரண்டே நாள்களில் ₹331 கோடி வசூல்

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ‘துரந்தர் 2’ படம் 2 நாள்களில் ₹331 கோடி வசூல் குவித்துள்ளதாக Sacnilk தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ₹267 கோடி வசூலித்துள்ள இப்படம் உலக அளவில் ₹64 கோடி வசூலை ஈட்டியுள்ளது. Preview ஷோவிலேயே ₹51 கோடி வசூலித்து புதிய சாதனையையும் இப்படம் படைத்திருந்தது. விடுமுறை தினமாக உள்ளதால், ஒரே வாரத்தில் ₹600 கோடியை நெருங்கும் எனக் கூறப்படுகிறது.


