News April 23, 2025
துரைமுருகன் விடுவிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு

1996-2001 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உள்பட அவரது குடும்பத்தினரை விடுவித்து 2007-ம் ஆண்டு வேலூர் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
Similar News
News April 23, 2025
2 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாரமுல்லா வழியே இந்தியாவுக்குள் இன்று தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் 2 தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்மூலம் அங்கு நடக்கவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
News April 23, 2025
வெளியான தீவிரவாதிகளின் வரைபடம்…

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 3 பேரின் வரைபடங்களை NIA வெளியிட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவதர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலை வைத்து இந்த வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பஹல்காமை சுற்றியுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
News April 23, 2025
எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வு

எம்.சாண்ட், ஜல்லி விலை ரூ.1,500க்கும் மேல் உயர்வடைந்துள்ளது. ஒரு யூனிட் எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்டவை ரூ.1,000 உயர்த்தப்படும் என்று அதன் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். எனினும், ஒரு யூனிட் எம்.சாண்ட் விலை ரூ.4,900-ல் இருந்து ரூ.6,450ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.3,900ல் இருந்து ரூ.5,523ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பி.சாண்ட் விலை ரூ.5,800ல் இருந்து ரூ.7,552ஆக உயர்த்தப்பட்டுள்ளது.