News April 29, 2025
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு விதிகளை வகுத்திருந்தது. இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. எழுத்துபூர்வமான வாதங்கள் முடிந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்: அப்பாவு

கரூர் துயரத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மக்களை சந்திக்கவுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு, விஜய் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பிரசாரத்திற்கு செல்கிறார் என்பதை சொல்லி அவரை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் அப்பாவு கேட்டுக்கொண்டுள்ளார். சில நாள்களாக விஜய்யை திமுகவினர் கடுமையாக சாடிய நிலையில், இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News November 22, 2025
மந்த நிலையில் சர்வதேச தங்கம் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடிக்கிறது. கடந்த 30 நாள்களில் 1 அவுன்ஸ்(28g) $68(1.67%) சரிந்துள்ளது. இதனால் தான் நம்மூரில், இம்மாதம் தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி, ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இதனிடையே, இன்று(நவ.22) பெரிய அளவில் மாற்றமின்றி 1 அவுன்ஸ் $4,065-க்கும், வெள்ளி $0.55 குறைந்து $50-க்கும் விற்பனையாகிறது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News November 22, 2025
ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.


