News July 4, 2024

வங்கி ஆவணங்கள் கோரிய வழக்கில் ஜூலை 8இல் தீர்ப்பு

image

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 8ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்கவும், வங்கி ஆவணங்களை தரக்கோரியும் வழக்கு தொடர்ந்தார். இதில், வங்கி ஆவணங்களை கோரிய வழக்கில் ஜூலை 8இல் தீர்ப்பு என நீதிபதி அறிவித்துள்ளார்.

Similar News

News September 22, 2025

திருப்பத்தூர்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? கவலை வேண்டாம்!

image

திருப்பத்தூர் மக்களே! பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர, 2.அரசாங்க வேலையில் பணியமர, 3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்ளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ இனி எந்த கவலையும் வேண்டாம். உடனே இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பித்து கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News September 22, 2025

திங்கள்கிழமையில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமா?

image

திங்கள்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. லீவ் முடிந்து திங்கள்கிழமை வேலைக்கு போகும்போது நமக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்குமாம். இது மாரடைப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. மேலும், வார இறுதியில் அதிகமாக மது அருந்துவதால் HighBP ஏற்பட்டு இதய செயலிழப்புக்கு வழிவகுக்குமாம். இதிலிருந்து தப்பிப்பது எப்படி என தெரிந்துகொள்ள <<17790792>>க்ளிக் பண்ணுங்க<<>>. SHARE.

News September 22, 2025

கிஸ் vs சக்தித் திருமகன்: பாக்ஸ் ஆபிசில் முந்தியது யார்?

image

செப்டம்பர் 19-ம் தேதி பல படங்கள் வெளியான போதிலும், ‘கிஸ்’ & ‘சக்தித் திருமகன்’ ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளன. 3 நாள் முடிவில், ‘கிஸ்’ படம் ₹1.76 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், ‘சக்தித் திருமகன்’ ₹3.79 கோடியை வசூலித்துள்ளதாம். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மேலும் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!