News April 25, 2024
நிர்மலா தேவி வழக்கில் நாளை தீர்ப்பு

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 2016இல் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பணியாற்றிய நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார். இதில் அனைத்துத் தரப்புச் சாட்சிகளிடமும் நடைபெற்ற விசாரணை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நாளை காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Similar News
News March 3, 2026
BREAKING: சிறப்பு நிதி ₹10,000.. அறிவித்தார் ஸ்டாலின்

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது, அவர்களது ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே மாதத்திற்கு மட்டும் சிறப்பு நிதியாக பகுதி நேர ஆசிரியர்களுக்கு ₹10,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 – 27-ம் ஆண்டு தொடர் செலவினமாக ₹44.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News March 3, 2026
ஈரானின் உயர் தலைவருக்கான தேர்தலின் போது தாக்குதல்

ஈரானின் புதிய தலைமை உருவாகுவதை தடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த உயர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
சந்திர கிரகணத்தால் இந்திய அணியின் பயிற்சியில் தாமதம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதிப் போட்டிக்காக இந்திய அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அட்டவணைப்படி, இன்று மாலை 6 – இரவு 9 மணி வரை பயிற்சி நடைபெற இருந்தது. ஆனால் கிரகணம் காரணமாக பயிற்சி இரவு 7 மணிக்கு மேல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கிரகண நேரத்தில் பயிற்சி செய்வது நல்லதல்ல என்று கருதப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


