News August 6, 2024

திமுக அமைச்சர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு

image

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1996-2001 திமுக ஆட்சியில், அமைச்சர்களாக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012இல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் இருவரையும் விடுவித்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார்.

Similar News

News December 9, 2025

#KovaiBiggestLandSCAM.. பின்னணி என்ன?

image

கோவையில் ₹3,500 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக சிங்காநல்லூர் அதிமுக MLA ஜெயராம் மீது புகார் எழுந்துள்ளது. ஜி-ஸ்கொயர் நிறுவனம் தனது இந்த புகாரை செய்தித்தாளில் பொது அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், திமுக ஆதரவாளர்கள் பலரும் #Kovaibiggestlandscam என்ற ஹேஷ்டேக்கை X தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். நேற்று அமைச்சர் <<18501393>>நேரு மீதான ED-ன்<<>> ஊழல் புகாரை அதிமுகவினர் விமர்சித்து வந்தனர்.

News December 9, 2025

சன்னிலியோன் போட்டோவை வைத்து விளையாடிய அஸ்வின்

image

IPL மினி ஏலம் டிச.16 தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பெயர்களை IPL டீம்களுக்கு Hint ஆக ரவிச்சந்திரன் அஸ்வின் கொடுத்து வருகிறார். அப்படி அவர் இன்று பதிவிட்ட போஸ்டில் சன்னிலியோன் + ஒரு தெரு(சந்து) போட்டோ இருந்தது. அந்த போட்டோவை வைத்து பார்க்கும் போது அவர் சொல்ல வந்த வீரரின் பெயர் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சன்னி சந்து என்பது தெரிய வருகிறது.

News December 9, 2025

‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

image

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!