News April 10, 2025

நீதிபதி மகனை தாக்கிய வழக்கு: தர்ஷனுக்கு ஜாமின்

image

நீதிபதி மகனைத் தாக்கிய வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பிக்பாஸ் படத்தின் மூலம் பலருக்கும் அறிமுகமான தர்ஷன், ‘கூகுள் குட்டப்பா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கார் நிறுத்துவது தொடர்பாக தர்ஷனுக்கு நீதிபதி மகன் ஒருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தர்ஷன் தன்னை தாக்கியதாக அவர் புகார் கொடுத்தார். தொடர்ந்து தர்ஷனை காவல்துறை கைது செய்தது.

Similar News

News November 26, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது அரசு

image

<<18304103>>அரையாண்டு தேர்வு அட்டவணையை<<>> வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. டிச.23 அன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும். இதையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின், 10 நாள்களில் பொங்கல் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. SHARE IT.

News November 26, 2025

உலகின் மிக அழகான கோட்டைகள் PHOTOS

image

கோட்டைகள், அரண்மனைகள் என்றாலே, ஏதோவொன்று நம்மை ஈர்க்கிறது. அவை, வரலாற்று கதைகளா, பிரம்மாண்டமான கட்டட கலையா, எது என்று தெரியவில்லை. ஆனால், நாம் வியந்து போகிறோம். அந்த வகையில், மிக அழகான கோட்டைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு கோட்டையும் இடம்பிடித்துள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News November 26, 2025

புஜாராவின் மைத்துனன் தற்கொலை

image

ராஜ்கோட்டில், கிரிக்கெட் வீரர் புஜாராவின் மைத்துனன் ஜீத் பபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் தான், Ex-Fiance கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஜீத் பபாரி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், மீள்வதற்கு வழிதெரியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்தாரா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!