News August 19, 2025

வெற்றிமாறன் தயாரித்த படத்தை பார்க்கும் நீதிபதி

image

வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ படத்தை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வரும் 24-ம் தேதி பார்க்க உள்ளார். படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பதால், அதை சென்ஸார் போர்டு நீக்க கோரியது. ஆனால், அதை எதிர்த்து வெற்றிமாறன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி, ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என சென்ஸார் போர்டு சுட்டிக்காட்டிய காட்சிகள் சரியானவையா என ஆய்வு செய்ய படத்தை பார்க்க உள்ளார்.

Similar News

News March 7, 2026

இந்தியாவின் பாதுகாப்பில் ஈரானின் கப்பல்

image

இந்திய பெருங்கடலில் தாக்கப்பட்ட ஈரானின் IRIS DENA போர்க்கப்பலில் சிக்கி தவித்தவர்களுக்கு இந்தியா உதவவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், Vizag-ல் சர்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்ற IRIS LAVAN போர்க்கப்பல் தற்போது பாதுகாப்பாக கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் தொழில்நுட்ப கோளாறு உள்ளதாக ஈரான் கூறிய நிலையில், இந்தியா உடனடியாக IRIS LAVAN-ஐ கொச்சியில் நிறுத்த அனுமதித்துள்ளது.

News March 7, 2026

அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா?

image

சமீபத்தில் டெல்லி சென்ற EPS, தொகுதி பங்கீடு விவரங்களை அமித்ஷாவிடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது பாஜகவின் விருப்ப பட்டியலில் திருத்தங்கள் செய்யவேண்டும் என அமித்ஷா கூறினாராம். பின்னர், அன்புமணி தந்த 30 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை EPS சரிபார்த்த போது, அதில் அதிமுகவினர் எதிர்பார்க்கும் மயிலம், மேட்டூர் உள்ளிட்ட சில தொகுதிகளும் இருப்பதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.

News March 7, 2026

ராஜ்ய சபா துணை தலைவராகிறாரா தம்பிதுரை?

image

ராஜ்ய சபா துணை தலைவரான நாராயண் சிங்கின் பதவிக்காலம் ஏப்.9-ல் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய துணை தலைவர் பதவியை ராஜ்ய சபா எம்பியாக தேர்வாகவுள்ள தம்பிதுரைக்கு பாஜக வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், லோக்சபாவில் துணை சபாநாயகராக பதவி வகித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதேநேரம், லோக் சபாவில் துணை சபாநாயகர் பதவியை நிரப்பாதது போல், ராஜ்ய சபாவிற்கும் அதே முடிவை மத்திய அரசு எடுக்கலாம்.

error: Content is protected !!