News September 28, 2025
தவெகவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி எம்.தண்டபாணி ஒப்புதல் வழங்கியுள்ளார். தவெக சார்பாக வழக்கறிஞர் அறிவழகன், நிர்மல் குமார் முறையிட்ட நிலையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வில் நாளை (செப்.29) பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. விசாரணையின் போது முக்கிய சிசிடிவி ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News September 28, 2025
BCCI தலைவரானார் மிதுன் மன்ஹாஸ்!

மும்பையில இன்று நடந்த ஆண்டு கூட்டத்தில், BCCI தலைவராக மிதுன் மன்ஹாஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். IPL-ல் டெல்லி, புனே, சென்னை அணிகளுக்காக மிதுன் விளையாடியுள்ளார். ரஞ்சி டிராபியில் டெல்லி கேப்டனாகவும் இருந்துள்ளார். கடைசியாக ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அதேபோல், இன்றைய பொதுக்கூட்டத்தில் ராஜீவ் சுக்லா, BCCI துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News September 28, 2025
போலீஸ் மெத்தனப்போக்குடன் செயல்பட்டுள்ளது: சசிகலா

கரூர் துயரத்திற்கு போலீஸின் மெத்தனப்போக்கே முதல் காரணம் என சசிகலா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் போலீஸ் மீது நிறைய தவறுகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், மாநில அரசு மட்டும் விசாரணை மேற்கொண்டால் போதாது என்றும், மத்திய அரசு தலையிட்டு உண்மையான தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
News September 28, 2025
கரூர் துயரம்: இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

கரூர் துயரத்துக்கு யார் காரணம் என சோஷியல் மீடியா விவாதங்களில் எழுப்பப்படும் கேள்விகள் இவை: *விஜய் தாமதமாக வந்தது ஏன்? போலீஸ் தடியடி ஏன்? *செருப்பு வீசியது யார்? *CCTV காட்சிகள் ஏன் வரவில்லை? *செ.பா., அன்பில் உடனே வந்தது எப்படி? *கூட்டம் அதிகமாவதை கண்காணித்து போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தாதது ஏன்? *ரவுண்டானாவில் திமுகவிற்கு அனுமதி, விஜய்க்கு ஏன் அனுமதி இல்லை?… உங்க கேள்வியை கமெண்ட் பண்ணுங்க.