News October 27, 2024
RSS பாஷையில் பேசும் ஜேடியூ.. தேஜஸ்வி யாதவ் தாக்கு

RSS பாஷையில் பீகாரை ஆளும் ஜேடியூ கட்சி பேசுவதாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். கலவரத்தை தூண்டவும், பிரிவினையை ஏற்படுத்தவும், 2 சமூகத்தினர் இடையே மோதலை உண்டாக்கவும் RSS , ஜேடியூ விரும்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் குறித்து தாங்கள் பேசுவதாகவும், ஆனால் பாஜகவோ ஹிந்து-முஸ்லிம், பாக்- காஷ்மீர் குறித்தே பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News August 24, 2025
விஜய்யை பற்றி சீமான் கூறியது உண்மை: பிரேமலதா

விஜய்யை நாங்கள் தம்பி என அழைப்பதாலேயே அவருடன் கூட்டணி வைப்போம் என்று அர்த்தமில்லை என பிரேமலதா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோதும், உடல்நலக் குறைவுடன் இருந்தபோதும் தெரியாத விஜயகாந்த், மறைந்த பிறகே விஜய்க்கு அண்ணனாக தெரிவதாக சீமான் கூறியது உலகறிந்த உண்மை என கூறியுள்ளார். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு பேசியுள்ளார்.
News August 24, 2025
பாஜகவின் இன்னொரு வடிவம் விஜய்: வன்னி அரசு

பாஜக, RSS-ன் இன்னொரு செயல் வடிவம் தான் விஜய் என்று விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு காட்டமாக விமர்சித்துள்ளார். திமுக மீது வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டில் கட்டமைப்பதுதான் விஜய்யின் அரசியலாக இருக்கிறது என சாடிய அவர், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று சொல்வதன் மூலம் விஜய் தனது அநாகரிகத்தையும், தலைமை பண்பையும் குறைத்திருக்கிறார் என்பதைதான் பார்க்க முடிகிறது எனவும் விமர்சித்தார்.
News August 24, 2025
₹48,000 சம்பளம்.. 750 பணியிடங்கள் அறிவிப்பு!

Punjab & Sind வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி (LBO) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 85 பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 – 30. தேர்வுமுறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழித்திறன். சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.4. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <