News March 15, 2025
வெற்றிப் பாதையில் பயணம் – செங்கோட்டையன் சூசகம்!

இபிஎஸ் உடனான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் விரிசலை ஏற்படுத்தும் வகையில் செங்கோட்டையன் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இக்கட்டான நிலையில் இருப்பதால் வெளிப்படையாக எதையும் பேச முடியாது என கூறியுள்ளார். தான் போகும் பாதை சரியானது எனத் தெரிவித்துள்ள செங்கோட்டையன், திட்டமிட்ட பாதையில், வெற்றி பெறும் பாதையில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 16, 2025
மஸ்க்கின் மகனுக்கு உதவிய டிரம்ப்

டிரம்பின் ஹெலிகாப்டரில் மஸ்க்கின் மகனை ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. புளோரிடாவில் உள்ள தனது வீட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதியுடன் மஸ்கின் மகன் சென்றார். சிறுவன் ஹெலிகாப்டரில் ஏற சிரமப்பட்டபோது, டிரம்ப் அவனுக்கு உதவினார். கடந்த சில நாட்களாக மஸ்க் தனது மகனை அமெரிக்காவில் நடக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2025
WPL: இவர்களுக்கே ஆட்ட நாயகி, தொடர் நாயகி விருது

WPL பைனலில் DC அணியை வீழ்த்தி, MI அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில், பொறுப்புடன் ஆடி 44 பந்துகளில் 66 ரன்கள் குவித்த MI அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆட்ட நாயகி விருதை வென்றார். அத்துடன், இந்த தொடரில் மொத்தம் 523 ரன்கள் குவித்த MI அணியின் நாட் சீவர் பிரண்ட் தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார். மேலும், நாட் சீவர் பிரண்ட் ஆரஞ்சு தொப்பியையும், அமெலியா கெர் பர்பிள் தொப்பியையும் கைப்பற்றினர்.
News March 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 208 ▶குறள்: தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று. ▶பொருள்: தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.