News April 26, 2024
அதிரடி சதம் விளாசிய ஜானி பேர்ஸ்டோ !

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வீரர் பேர்ஸ்டோ அதிரடி சதம் விளாசினார். முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 என்ற கடின இலக்கை துரத்தும் பஞ்சாப் அணிக்கு, கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பேர்ஸ்டோ 8 சிக்சர், 8 பவுண்டரிகளுடன், 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். தற்போது பஞ்சாப் அணி 16.1 ஓவரில் 210/2 ரன்கள் எடுத்துள்ளது.
Similar News
News November 14, 2025
நவம்பர் 14: வரலாற்றில் இன்று

*உலக நீரிழிவு நாள். * தேசிய குழந்தைகள் தினம். *1889 – ஜவகர்லால் நேரு பிறந்தநாள். *1965 – அமெரிக்கா – வியட்நாம் இடையே போர் தொடங்கியது. 1971 – மரைனர் 9 விண்கலம் செவ்வாய் கோளை சென்றடைந்தது. 1957 – நடிகர் ஆர்.பார்த்திபன் பிறந்தநாள். 1984 – நடிகை மம்தா மோகன்தாஸ் பிறந்தநாள். *1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
News November 14, 2025
IND vs SA: முதல் டெஸ்ட் இன்று.. கில் படை வெல்லுமா?

IND vs SA இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. கடந்த முறை நியூஸி., அணி, ஸ்பின்னர்களை வைத்து IND அணியை ஒயிட்வாஷ் செய்தது. அதேபோல, SA-வும் 3 ஸ்பின்னர்களை ஆயுதமாக கூர்திட்டி வருகிறது. எனவே, இந்த தொடர் IND அணிக்கு சவாலாகவே இருக்கும். இரு அணிகளும் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் SA 18, IND 16 போட்டிகளிலும் வென்றுள்ளன. மீதமுள்ள போட்டிகள் டிராவில் முடிந்தன.
News November 14, 2025
பள்ளி மாணவர்களுக்கு META AI தலைவரின் அட்வைஸ்

13 வயது உள்ள மாணவர்கள், இப்போதிருந்தே AI டூல்ஸ்களை கற்றுக்கொள்ள வேண்டும் என META AI தலைவர் அலெக்சாண்டர் வாங் அறிவுறுத்தியுள்ளார். இதுதான் சரியான நேரம் எனவும், AI டூல்ஸ்களில் நிபுணத்துவம் அடைந்தால், வருங்காலத்தின் பொருளாதாரமும், டெக்னாலஜியும் உங்களுடையதே என்றும் வாங் கூறியுள்ளார். பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் தங்கள் இளமை காலத்தில் இதையே செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


