News October 19, 2025
விஜய்க்கு ஆதரவாக தவெகவில் இணைந்தார்.. புதிய திருப்பம்

விஜய்க்கு ஆதரவாக அவரது தந்தை S.A.சந்திரசேகர் தவெகவில் இணைந்துள்ளார். அண்மையில், இயக்குநர் அமீர், விஜய்க்கு சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் அவரது தந்தை உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். MGR, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருடன் நட்பு வட்டத்தில் இருந்த SAC, நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அதனால், தவெகவில் இது திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News October 19, 2025
முடிவுக்கு வந்தது AFG-PAK போர்!

ஒரு வாரமாக நடந்து வந்த ஆப்கன் – பாக் போர் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இரு நாடுகள் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை மீறி, ஆப்கானிஸ்தானில் 3 இடங்களில் குண்டுவீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆப்கன் பதிலடி கொடுக்கப்படும் என கூறியதால், நிலைமை கைமீறி போய்விடக்கூடாது என்பதற்காக கத்தார் & துருக்கி மத்தியஸ்தம் செய்தது. இந்நிலையில், போர் முடிவுக்கு வந்துள்ளது.
News October 19, 2025
மூலிகை: மந்தாரையின் அசத்தல் மருத்துவ குணங்கள்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மந்தாரை செடியின் பட்டையை இடித்து, நீரில் சுண்டக்காய்ச்சி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும் ■மந்தாரை இலைகள் வாதநோய், தசைபிடிப்பு தொடர்புடைய வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது ■கக்குவான் இருமல், ஆஸ்துமா, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு மந்தாரை இலை சிறந்த மருந்து ■காயங்கள், கட்டிகளுக்கு மந்தாரை இலைச்சாறு மருந்தாகப் பயன்படுகிறது.
News October 19, 2025
திமுகவில் இணைந்தனர்

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.