News April 6, 2025
வருகிறது ஜான் விக்-5.. ஆக்சன் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

ஜான் விக் பட சீரிஸில் இதுவரை 4 பாகங்கள் வெளியாகியுள்ளன. நாயைக் கொன்றோரை பழிதீர்க்கவும், தன்னை காக்கவும் நாயகன் பலரை கொல்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 4-வது பாகம் நாயகன் கீனு ரீவ்ஸ் இறப்பது போன்று முடிக்கப்பட்ட நிலையில், தற்போது 5ஆவது பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், இதிலும் கீனு ரீவ்ஸ்தான் நாயகன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஜான் விக் பார்த்துட்டிங்களா? கீழே கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News November 26, 2025
பகட்டான கொண்டாட்டங்களை விரும்புவதில்லை: உதயநிதி

DCM உதயநிதி ஸ்டாலின், நாளை (நவ.27) தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பகட்டான கொண்டாட்டங்களை தான் விரும்புவதில்லை என்ற உதயநிதி, தன்னுடைய பிறந்தநாளில், கொள்கை பணியும் மக்கள் பணியும் இணைந்து இருந்தாலே தனக்கு மனநிறைவை தரும் என்றும் கூறியுள்ளார். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.
News November 26, 2025
செங்கோட்டையனுக்கு விஜய் கட்சியில் முக்கிய பதவி!

தவெகவில் இணையவுள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைப்புச் செயலாளர் என்பவர், ஒரு அரசியல் கட்சியின் அமைப்புகளை நிர்வகிக்கும் மற்றும் வலுப்படுத்தும் பணிகளை செய்யும் நபராக இருப்பார். இந்த பதவி, கட்சிகளின் பிரிவுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை உறுதிசெய்து, அதன் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
News November 26, 2025
நகை திருட்டு வழக்குகளில் இழப்பீடு தர அரசுக்கு உத்தரவு

2022-ல் கொள்ளை வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய கோரி, ஒருவர் மதுரை HC-ல் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த HC, திருட்டு வழக்குகள் மீதான போலீஸின் மெத்தனமான போக்கையே இது காட்டுவதாக சாடியது. திருடுபோன பொருளின் மதிப்பில் 30%-ஐ மாநில அரசு தரவும் HC உத்தரவிட்டது. ஒருவேளை காணாமல் போன பொருள்கள் மீட்கப்பட்டால், இந்த இழப்பீட்டை பாதிக்கப்பட்டவர் திருப்பி அளிக்க வேண்டும் எனவும் HC தெரிவித்துள்ளது.


