News August 5, 2024
ஷாருக்கானுடனான சந்திப்பை நினைவுகூர்ந்த ஜான் சினா

அம்பானி மகனின் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கானை சந்தித்தது, உணர்வுப்பூர்வமானது என WWE வீரர் ஜான் சினா தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவருடன் கைகுலுக்கியது அற்புதமான தருணம் எனவும், ஷாருக்கானுடைய பேச்சு உத்வேகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், வாழ்க்கையின் சரியான நேரத்தில் அவருடைய பேச்சுக்களை கேட்கும் வாய்ப்பு அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
குமரி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

நாகர்கோவில் வரை இயக்கப்பட்ட 7 ரயில்கள் கன்னியாகுமரி வரை நிரந்தரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தாம்பரம் – நாகர்கோவில் வாரம் மும்முறை , தாம்பரம் – நாகர்கோவில் ரயில், வாராந்திர நாகர்கோவில் – திருநெல்வேலி பாசஞ்சர் , புனலூர் நாகர்கோவில் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் நிரந்தரமாக கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்படுகிறது.
News January 20, 2026
BREAKING: விஜய்யின் அடுத்த முக்கிய முடிவு

கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக விஜய்யிடம் நேற்றும் CBI கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இதனிடையே, விஜய் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது தவறான தகவல் என CTR நிர்மல்குமார் கூறியுள்ளார். இதனால் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வராமல், கரூர் வழக்கை சட்ட வல்லுநர்களுடன் கையாள விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 20, 2026
தங்கம் விலை தாறுமாறாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை இன்றும் தாறுமாறாக அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $65.14 உயர்ந்து $4,661.41-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $3.06 உயர்ந்து $93.19 ஆக உள்ளது. இதனால், இன்று (ஜன.20) இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


