News August 30, 2024
டெஸ்டில் ஜோ ரூட் புதிய சாதனை

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கி., வீரர் ஜோ ரூட் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 10ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 145 டெஸ்டில் விளையாடியுள்ள அவர் இதுவரை 33 சதம் அடித்துள்ளார். சச்சின் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். டிராவிட் 36, கவாஸ்கர் 34 சதங்களுடன் முறையே 5 மற்றும் 7ஆவது இடத்தில் உள்ளனர். மே.இந்திய தீவுகளின் ஜாம்பவான் லாரா 34 சதத்துடன் 8ஆவது இடத்தில் உள்ளார்.
Similar News
News July 7, 2025
துபாயில் செட்டிலாகணுமா..? இதுதான் சூப்பர் சான்ஸ்

இனி ₹23 லட்சம் செலுத்தினால் இந்தியர்கள் கோல்டன் விசா வழங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. முன்னதாக, விசா பெற ₹4.66 கோடி மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் 3 மாதங்களிலேயே 5,000-க்கும் அதிகமான இந்தியர்கள் விசாவிற்காக விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News July 7, 2025
சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரியும் தங்கம்!

சர்வதேச சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருகிறது. பிற்பகல் 2.30 மணி நேர நிலவரப்படி 1 அவுன்ஸ்(28 கிராம்) 28 USD (இந்திய மதிப்பில் ₹2,408) குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையில் இன்று சவரனுக்கு ₹400 விலை குறைந்ததை போல் நாளையும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ தங்கம் விலை குறைந்தால் மகிழ்ச்சி அதானே மக்களே?
News July 7, 2025
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வழக்கில் நாளை தீர்ப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும் ஜாமின் கோரி கோர்ட்டை நாடினர். இந்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில், அவர்களது ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என ஐகோர்ட் அறிவித்துள்ளது.