News March 19, 2024
இஸ்ரேல் அதிபரை எச்சரித்த ஜோ பைடன்!

காஸாவின் ரஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ‘ரஃபா நகரில் நடத்தும் தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க அமெரிக்காவுக்கு, அதிகாரிகள் குழுவை அனுப்புமாறு நெதன்யாகுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
Similar News
News November 22, 2025
கரூர்: வாக்களர் கவனத்திற்கு IMPORTANT

கரூர் மாவட்டம், 2002 வாக்காளர் பட்டியல் இல் உங்கள் வாக்காளர் விபரங்களை தேடும் வகைக்யில் கரூர் மாவட்ட நிர்வாக இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. https://karur-electors.vercel.app/?tsc=AC152 இந்த இணையதளம் மூலமாக தங்களது 2002 வாக்காளர் விவரங்களை ஐந்து வினாடிகளில் கண்டுபிடிக்க முடியும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
News November 22, 2025
உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா

ரஷ்ய போர் நிறுத்தத்திற்கு தாங்கள் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்குமாறு உக்ரைனை USA மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இணங்க மறுத்தால் ஆயுதங்கள், உளவு தகவல்கள் பகிர்வது நிறுத்தப்படும் என எச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தங்களை கலந்து ஆலோசிக்காமல், இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி வருகிறது. USA நிபந்தனைகளின் படி, உக்ரைன் சில பகுதிகளை இழக்க நேரிடும்.
News November 22, 2025
பாஜக ‘P’ டீம்: தமிழிசை

தமிழகத்தின் 2026 தேர்தல் பிஹார் தேர்தல் போல இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். விஜய், ஸ்டாலின் கூறுவது போல பாஜக ஏ டீம், பி டீ எல்லாம் கிடையாது எனவும் நாங்கள் ’P’ டீம், அதாவது People’s Team என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் பாஜக இரட்டை இலக்க MLA-க்களை பெறும் என்ற அவர், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.


