News August 28, 2024
JOBS: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் உள்நாட்டு நீர் போக்குவரத்துத் துறையில் (IWAI) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அசிஸ்டென்ட் டைரக்டர், அசிஸ்டென்ட் ஹைட்ரோகிராபிக் சர்வேயர், லைசென்ஸ் என்ஜின் டிரைவர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட 11 பதவிகளில் காலியாக உள்ள 37 இடங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் www.iwai.nic.in தளத்தில் செப்.15 வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News August 17, 2025
துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென அப்பதவியில் இருந்து விலகினார். இதனால், வரும் 9-ம் தேதி அப்பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், NDA கூட்டணி சார்பில், மகாராஷ்டிரா கவர்னராக உள்ள ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் PM மோடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு JP நட்டா அறிவித்துள்ளார்.
News August 17, 2025
‘PMVBRY’ திட்டத்தில் ₹15,000.. யார் யாருக்கு கிடைக்கும்?

PM Viksit Bharat Rozgar Yojana மூலம் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ₹15,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 31.7.2027 வரை 3.5 கோடி பேருக்கு ₹99,444 கோடி வழங்கப்படவுள்ளது. ₹1 லட்சம் வரை சம்பளம் பெறுவோர் இதில் பயன் பெறலாம். பணியில் சேர்ந்த 6 மாதங்களுக்கு பிறகு முதல் தவணையும், 12 மாத சேவைக்கு பிறகு 2-வது தவணையும் கிடைக்கும். அப்ளை செய்ய இங்கே <
News August 17, 2025
லியோவின் சாதனையை மீண்டும் முறியடித்த கூலி

பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினி-விஜய் ரசிகர்களுக்குள் இருக்கும் COLD WAR பற்றி அனைவரும் அறிந்ததே. இதனால் சமீபத்தில் வெளியான ’கூலி’ படத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். ஆனால் கூலியோ விஜய்யின் லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அதாவது, 5 நாள்களில் ₹300 கோடி ஈட்டிய லியோவின் சாதனையை வெறும் 3 நாள்களில் (சுமார் ₹324 கோடி) கூலி படம் முறியடித்துள்ளது.