News August 4, 2024

SBI-யில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் விளையாட்டு வீரர் இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நிலையில் 17 பதவிகளும், கிளரிக்கல் நிலையில் 51 பதவிகளும் என மொத்தம் 68 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக SBI தெரிவித்துள்ளது. வயது வரம்பு 30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. <>https://bank.sbi/web/careers<<>>இல் 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 20, 2026

மகளிர் உரிமைத் தொகை.. பேரவையில் HAPPY அறிவிப்பு

image

2021-ல் தொடங்கிய CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேரவையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 20, 2026

அப்போ 40 வயசானா அவ்ளோ தானா?

image

நீங்கள் 40 வயதை நெருங்குகிறீர்களா? கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? அப்படியென்றால் இச்செய்தி உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஒரு காலத்தில் அனுபவம், திறமையின் உச்சமாக 40 வயது கருதப்பட்டது. ஆனால் அதிகரித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையால் தற்போது 40 வயதை தொட்டாலே கார்ப்பரேட்டில் பணிநீக்கம் செய்ய தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் அவர்களை விட இளம் வயதினர் திறன்மிக்கவர்களாக கருதப்படுகின்றனர்.

News January 20, 2026

மைக் ஆஃப் செய்யப்படவில்லை: அமைச்சர் ரகுபதி

image

சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தும், அரசின் உரையை கவர்னர் வாசிக்காமல் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக கூறுவது பொய் என்று கூறிய அவர், எதிர்க்கட்சிகள் கூட சொல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை கவர்னர் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கவர்னர் வெளியேறிய உடனே 3 பக்க அறிக்கை வருகிறது என்றால் அது திட்டமிடப்பட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!