News August 12, 2024

JOBS: தபால்துறை வங்கியில் வேலைவாய்ப்பு

image

இந்திய தபால்துறையின் PAYMENT வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பைனான்ஸ், தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, புரொடக்ட், இன்டர்னல் ஆடிட், ஆபரேஷன் ஆகிய பதவிகளில் 19 காலி இடங்கள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதி கடைசி நாள் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 3, 2026

அதிமுகவில் இணைந்த திமுக, மதிமுக நிர்வாகிகள்

image

கரூரில் திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 24-வது வார்டு திமுக உறுப்பினரும் கரூர் மாநகர மேற்கு பகுதி Ex செயலாளருமான அன்பரசன் மற்றும் கரூர் மாவட்ட மதிமுக Ex பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் அக்கட்சிகளில் இருந்து விலகி, EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். போதை கலாசாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிட EPS-ன் தலைமையை ஏற்று இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

News April 3, 2026

PM மோடியுடன் ரஷ்ய DPM முக்கிய ஆலோசனை

image

2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய DPM டெனிஸ் மந்த்ரொவ் PM மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதில் இருதரப்புக்கு இடையேயான உறவு, வர்த்தகம், உரங்கள் விநியோகம் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார். அதோடு, 2025-ல் நடந்த இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு, இருதரப்பும் மேற்கொள்ளும் முயற்சிகளை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

News April 3, 2026

வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு மசோதாவுக்கு தவெக எதிர்ப்பு

image

வெளிநாட்டு நிதி பங்களிப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி & மருத்துவத் தொண்டு நிறுவனங்களை முடக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு துடிப்பது ஏன் எனவும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

error: Content is protected !!