News July 26, 2024
பணிய வேண்டி இருக்கும்: மதுரை எம்பி

நீட் விலக்கு குறித்து தமிழகம் நிறைவேற்றிய தீர்மானம் அரசின் கவனத்திற்கு வந்ததா என மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அதற்கான பரிசீலனை அரசு மட்டத்தில் இல்லை என இணை அமைச்சர் பதிலளித்ததாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தின் குரல் இன்று பல மாநிலங்களில் ஒலிப்பதாகவும், மக்களின் கருத்து வலுவடையும் போது அரசு பணிய வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
கண்களில் காதலுடன் கணவருடன் SAM.. PHOTOS!

நெருங்கிய நண்பர்கள் & உறவினர்கள் மத்தியில், நேற்று நடிகை சமந்தாவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் எடுத்து கொண்ட போட்டோக்களை, அவரது தோழி ஷில்பா ரெட்டி பகிர்ந்து, மணமக்களை வாழ்த்தியுள்ளார். சமந்தா கண்களில் காதலுடன் கணவர் ராஜை பார்க்கும் போட்டோ ஒன்றும் இவற்றில் இடம்பெற்றுள்ளது. திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் நடிகை சமந்தாவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
News December 2, 2025
ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்கள்: சீமான்

சட்டமன்றத் தேர்தலையொட்டி, வரும் பிப்ரவரி 21-ம் தேதி நாதக சார்பில் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சியில் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார். கூட்டணி வைக்காமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக தனித்து களம் காண்கிறது. இந்த மாநாட்டில் நாதக சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News December 2, 2025
கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஆசிய கோப்பையில் காயம் அடைந்த ஹர்திக், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். BCCI-ன் சிறப்பு மையத்தில்(COE) சிகிச்சை எடுத்து கொண்ட அவர், T20-ல் விளையாட முழு உடற்தகுதி பெற்றுள்ளாராம். எனவே, பரோடா அணிக்காக சையது முஷ்டாக் தொடரில் விளையாடவுள்ளார். இதனை தொடர்ந்து, வரும் 9-ம் தேதி தொடங்கும் SA-வுக்கு எதிரான T20 தொடரிலும் ஹர்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


