News July 25, 2024
ரிசர்வ் வங்கியில் பணி

மத்திய ரிசர்வ் வங்கியில் ( RBI) அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலியிடம்: 94. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இன்று முதல் ஆக.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.inஇல் பார்க்கவும்.
Similar News
News December 1, 2025
கம்பீர் & ரோஹித் – கோலிக்கு இடையே வெடித்த பிரச்னை!

பயிற்சியாளர் கம்பீருக்கும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் ரோஹித் – கோலி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு அறிவித்ததில் இருந்தே, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் & கம்பீருடன் இரு வீரர்களுக்கும் உரசல் உருவானதாக கூறப்படுகிறது. விரைவில் Ro-Ko-வின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
News December 1, 2025
பஸ் விபத்தை தடுக்க ஓட்டுநர், நடத்துநருக்கு டிரெய்னிங்!

<<18436984>>காரைக்குடி, மாமல்லபுரத்தில்<<>> அரசு பஸ் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு விபத்தை தடுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். TNSTC-ல் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து கூடுதலாக வேலை வாங்குவதே விபத்துக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதனை மறுத்துள்ள அமைச்சர், விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.
News December 1, 2025
இரும்பு கம்பியை சொருகியது போல் வலி: திருமா உருக்கம்

கட்சியின் வளர்ச்சிக்காக, தாங்க முடியாத உடல் வலியையும் பொருட்படுத்தாமல் பணியாற்றுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்சி பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக முட்டி வலி, கால் வலி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கழுத்தில் இருந்து இடுப்பு வரை இரும்பு கம்பியை சொருகி வைத்தது போல் உள்ளதாக உருக்கத்துடன் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.


