News August 23, 2024
NHAI ஆணையத்தில் ₹2.15 லட்சம் சம்பளத்தில் வேலை

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) ₹67,700 முதல் ₹2.15 லட்சம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டெபுடேசன் அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவின் பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் தலா 20 என மொத்தம் 60 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாக NHAI தெரிவித்துள்ளது. விருப்பமுள்ளோர் www.nhai.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 24, 2025
இயற்கை விவசாயிகளாக மாறிய தோனி, சல்மான் கான்

இந்திய முழுவதும் கொண்டாடப்படும் நட்சத்திரமான தோனி, விவசாயத்தின் மீது நாட்டம் கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. அவ்வப்போது அவர் டிராக்டர் ஓட்டும் வீடியோக்கள் SM-ல் டிரெண்டாவது வழக்கம். இந்நிலையில் அவருடன் இணைந்து பாலிவுட் ஸ்டாரான சல்மான்கானும் விவசாயியாக மாறியுள்ளார். இருவரும் வயலில் சேற்றுடன் இருக்கும் போட்டோ வைரலான நிலையில், கோடீஸ்வர விவசாயிகள் இவர்கள்தான் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News December 24, 2025
மின்னல் வேக டெலிவரிக்கு பின் இருக்கும் மர்மம்!

Quick-Commerce நிறுவனங்கள் மின்னல் வேக டெலிவரி மூலம், மக்களின் பொறுமை, திட்டமிடல் திறனை குறைப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Data Analytics மூலம் குறிப்பிட்ட நேரத்தில் என்ன உணவுகளை மக்கள் விரும்புவார்கள் என்பதை கணித்து, Dark Store-களில் நிறுவனங்கள் சேமிக்கின்றன. கஸ்டமர் ஆர்டர் செய்ததும் டிராஃபிக், அருகில் உள்ள Dark Store-ஐ Calculate செய்து 10 நிமிடங்களில் டெலிவரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர்.
News December 24, 2025
புதிய வாக்காளர்களில் ஒருவர் கூட விடுபடக்கூடாது: விஜய்

வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என பார்க்க வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகாதவர்களுக்கு தவெக நிர்வாகிகள் உதவ வேண்டும் என்றும், புதிய வாக்காளர்களில் ஒருவர்கூட விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். எதிரிகளின் சூழ்ச்சிகளை உணர்ந்து விழிப்புடன் இருக்கவும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.


