News October 7, 2025
வங்கியில் ₹93,960 சம்பளத்தில் வேலை.. அப்ளை பண்ணுங்க

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 56 மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிகிரி முடித்த 24-39 வயதுக்குட்பட்டவர்கள் மேனேஜர், சீனியர் மேனேஜர், Forex Acquisition பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ₹93,960 முதல் ₹1,05,280 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.
Similar News
News October 7, 2025
சாம்பியன் பவுலர் ஜாஹிர் கானுக்கு பிறந்தநாள்

2011 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜாகிர் கானுக்கு இன்று 47-வது பிறந்தநாள். டெஸ்டில் 311 விக்கெட்களும், ODI-ல் 282 விக்கெட்களும் எடுத்துள்ள அவர், Knuckle ball வீசுவதில் வல்லவர். Zippy Zakky என்று செல்லமாக அழைக்கப்படும் ஜாஹிர் கானின் பவுலிங் ஆக்ஷனை சிறுவயதில் நாம் ஒரு முறையாவது கட்டாயம் முயற்சித்திருப்போம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை லைக்ஸ் போட்டு தெரிவியுங்கள்..
News October 7, 2025
CINEMA ROUNDUP: ‘ஜீனி’ படத்தின் பாடல் இன்று ரிலீஸ்

*ரவி மோகனின் ‘ஜீனி’ படத்தில் இருந்து ABDI ABDI பாடல் இன்று வெளியாகிறது. * STR49 படத்தின் டைட்டில் இன்று காலை 8.09 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது. *ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’டீசல்’ படத்தின் தொடக்க காட்சிக்கு வெற்றிமாறன் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார். *’பராசக்தி’ ரிலீஸிற்கு இன்னும் 100 நாள்கள் இருப்பதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது.
News October 7, 2025
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்: PM மோடி

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக PM மோடி விமர்சித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்த BJP MP, MLA-க்கள் தாக்குதலுக்குள்ளானது, திரிணாமுல் காங்கிரஸின் உணர்வின்மையை காட்டுவதாக அவர் சாடியுள்ளார். மேலும் மேற்குவங்க அரசும், திரிணாமுல் காங்கிரஸினரும் வன்முறையில் ஈடுபடுவதை விடுத்து மக்களுக்கு உதவ வேண்டும் என்று PM மோடி கேட்டுகொண்டுள்ளார்.