News September 26, 2024
JOB ALERT: NTPC நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் காலியாக இருக்கும் 250 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் இருக்கும் துணை மேலாளர் பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு 3-10 ஆண்டு வரை முன் அனுபவம், BE, B-TECH தேர்ச்சி அவசியம் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 28ம் தேதி கடைசி நாள் ஆகும். கூடுதல் விவரங்களை www.careers.ntpc.co.in இணையதளத்தில் காணலாம்.
Similar News
News August 12, 2025
திமுகவுக்கு எதிராக கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்

ஆணவக்கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக அரசு இயற்றாதது ஏன் சிபிஎம் கட்சியை சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இது புரியாத புதிராக இருப்பதாக கூறிய அவர், இத்தகைய செயல் தமிழக அரசுக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது என்றார். மேலும் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து EPS பேசாதது ஏன் என்று கேட்ட அவர், சொந்த முகவரியை இழந்து நிற்கிற கட்சி என்றால் அது அதிமுகதான் என விமர்சித்தார்.
News August 12, 2025
தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்துக்கொண்டே செல்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ₹87.66-ஆக உள்ளது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும்; சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், உரங்கள், எரிவாயு ஆகியவற்றுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
News August 12, 2025
OPSஐ விமர்சிக்க கூடாது: பாஜக உத்தரவு

OPS-ஐ விமர்சிக்க கூடாது என நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. NDA-வில் தொடர்ச்சியாக OPS ஓரங்கட்டப்பட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அவர் அறிவித்தார். இதனையடுத்து அவரை கூட்டணியில் இணைக்க பாஜக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகம் வரும் PM மோடியுடன், அவரை சந்திக்க வைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜக பக்கம் மீண்டும் செல்வாரா OPS ?