News January 8, 2025
JOB ALERT: HDFC வங்கியில் ரூ.12 லட்சம் சம்பளத்தில் வேலை

HDFCஇல் 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. RELATIONSHIP மேனேஜர் நிலையிலான பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் – ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி, SALESஇல் 10 ஆண்டு முன் அனுபவம் கோரப்பட்டுள்ளது. விருப்பம் இருப்போர் பிப். 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News February 22, 2026
வங்கி கணக்கில் ₹2,000.. வந்தது ALERT

PM KISAN திட்ட பயனாளிகள் அடுத்த தவணையை (₹2,000) பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. நீங்கள் KYC அப்டேட் செய்திருந்தாலும், வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தாலோ, NPCI மேப்பிங் புதுப்பிக்கப்படாவிட்டாலோ பணம் வராமல் போகலாம். ஹோலி பண்டிகைக்கு முன்பாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால், பணிகளை உடனே முடியுங்கள். SHARE IT.
News February 22, 2026
திமுக மாநில மாநாடு தேதி மாற்றம்

திருச்சியில் நடைபெறவிருந்த திமுக மாநில மாநாடு மார்ச் 8-ம் தேதிக்கு பதில் 9-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது X பக்கத்தில், மார்ச் 9-ல் திருச்சியில் “மெயின் பிக்சர்” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இதனால், அந்த மாநாட்டில் மகளிருக்கான முக்கிய தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News February 22, 2026
FLASH: சரத்பவார் ஹாஸ்பிடலில் அனுமதி

NCP மூத்த தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் 2 நாள்களுக்கு சிகிச்சையில் இருப்பார் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். டிஸ்சார்ஜ் ஆன பிறகும், அவர் சிறிது காலம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


