News March 20, 2025
JOB ALERT: தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு

MTC, SETC, TNSTC உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (மார்ச் 21) முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News July 8, 2025
ராசி பலன்கள் (08.07.2025)

➤ மேஷம் – அன்பு ➤ ரிஷபம் – ஆக்கம் ➤ மிதுனம் – இன்பம் ➤ கடகம் – குழப்பம் ➤ சிம்மம் – அசதி ➤ கன்னி – பரிவு ➤ துலாம் – பாசம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – சாந்தம் ➤ மகரம் – சிந்தனை ➤ கும்பம் – விவேகம் ➤ மீனம் – சினம்.
News July 8, 2025
லாரா சாதனையை உடைக்க விரும்பவில்லை: முல்டர்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் 367 ரன்களை குவித்து பிரம்மிக்க வைத்தார். உண்மையில் அவரால் பிரையன் லாரா அடித்த 400 ரன்களை கடந்து உலக சாதனை படைத்திருக்க முடியும். ஆனால் அவர் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். மேலும் லாரா போன்ற லெஜண்டின் சாதனை, வரலாற்றில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் டிக்ளேர் செய்ததாக முல்டர் தெரிவித்துள்ளார். யார் சாமி இவன்?
News July 8, 2025
WARNING: டாய்லெட்டில் போன் பயன்படுத்துவீர்களா?

*கழிப்பறை சீட், குழாய், கைப்பிடி மீதுள்ள கிருமிகள் செல்போனில் ஒட்டிக்கொள்ளும் *இதனால் UTI, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்படலாம் *போனில் தொற்றும் கிருமி, குழந்தைகளுக்கும் தொற்றலாம் *20-30 mins போன் பார்த்துக் கொண்டிருந்தால் மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படும் *மலச்சிக்கல் ஏற்படும் *மூலம் ஏற்படும் ஆபத்து *உங்கள் நேரம் வீணாகும் *போன் தவறி டாய்லெட்டில் விழலாம் *மேலும், போனுக்கும் அடிமையாவீர்கள்.