News February 16, 2025
JOB ALERT: பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் 137 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை டிரெய்னி என்ஜீனியர், புராஜெக்ட் என்ஜீனியர் நிலையிலான பணியிடங்கள் ஆகும். வேலையில் சேர வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை குறித்த கூடுதல் தகவல்களை பெல் நிறுவன இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE.
Similar News
News December 10, 2025
₹12 லட்சம் சம்பாதித்தால் மட்டுமே மது வாங்க முடியும்!

மதுவிலக்கு அமலில் உள்ள சவுதியில், முதல்முறையாக இஸ்லாமியர் அல்லாத வெளிநாட்டு குடிமக்களுக்கு மது விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், மாதம் ₹12 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் மட்டுமே, தங்கள் வருமான சான்றிதழை காட்டி மது வாங்க முடியும். முன்னதாக, 1952-ல் அந்நாட்டு அரசரின் மகன் குடிபோதையில், பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக் கொன்றதால், 73 ஆண்டுகளாக மது தடை செய்யப்பட்டிருந்தது.
News December 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 10, கார்த்திகை 24 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News December 10, 2025
ஜான் சீனா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் & பேட் நியூஸ்!

WWE-ல் அதிக ரசிகர்களை கொண்ட ஜான் சீனா, அதில் இருந்து ஓய்வு பெற இன்னும் 4 நாள்களே உள்ளன. வரும் 13-ம் தேதி பாஸ்டனில் நடைபெறும் போட்டியே அவரது கடைசி போட்டியாகும். இதனால், சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு அவர் ஒரு நல்ல செய்தியையும் கூறியுள்ளார். அதாவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு WWE தூதுவராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார். இருப்பினும், அவரை Ring-ல் பார்க்க முடியாதே என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது.


