News March 22, 2025
JOB: கோவையில் வேலை வாய்ப்பு

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 114 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8th, B.Com, B.Sc, BA, Diploma, ITI, M.Sc, MA, MBBS, Nursing, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 60,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மார்ச்.24 கடைசி நாள் ஆகும். இதற்கு <
Similar News
News March 25, 2025
தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.
News March 25, 2025
ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.
News March 25, 2025
கொங்கு நாட்டு விலங்கு! கின்னஸ் சாதனை

கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க