News April 27, 2025
J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
Similar News
News October 25, 2025
உடல் வலிகளுக்கு சிறந்த ஆசனங்கள்

அன்றாட உடல் வலிகளுக்கு எளிய யோகா ஆசனங்கள் பயனளிக்கும். ஒவ்வொரு ஆசனமும் உங்கள் தசைகளை தளர்த்தவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மருந்துகள் இல்லாமல் இயற்கையாகவே வலியைக் குறைக்கிறது. என்ன பிரச்னைக்கு, என்ன ஆசனம் செய்யலாம் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்க நண்பர்களுக்கு share பண்ணுங்க.
News October 25, 2025
ரஜினி – கமல் படத்தை இயக்கும் நெல்சன்

பல ஆண்டுகளுக்கு பின் கமல், ரஜினி ஒரே படத்தில் இணைவதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதை யார் இயக்கப்போகிறார் என்பது கேள்விக்குரியாகவே இருக்கிறது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் படத்தை நெல்சன் இயக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக புது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் -2 செட்டில் ரஜினியிடம் கதை சொல்லி நெல்சன் ஒகே பெற்றதாக கூறப்படுகிறது.
News October 25, 2025
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விநோத முடிவு

டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத்துக்கு நிர்வாக அமைப்பில் பொறுப்பு கொடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விநோதமாக செயல்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மற்றும் வீரர்கள் விவகாரங்களுக்கான ஆலோசகராக ஷான் மசூத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வட்டாரத்தில் கேப்டனுக்கு நிர்வாக பொறுப்பு கொடுப்பது இதே முதல்முறை என சொல்லப்படுகிறது.


