News June 27, 2024
ஜியோ கட்டண விலை உயர்வு விவரம்

தினசரி 2ஜிபி டேட்டா உடன் 28 நாளுக்கான ஜியோ கட்டணம் ₹299இல் இருந்து ₹349ஆகவும், அதே டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ₹533இல் இருந்து ₹629ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாளுக்கான கட்டணம் ₹719இல் இருந்து ₹859ஆகவும், 2.5 ஜிபி டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ₹2,999இல் இருந்து ₹600 உயர்ந்து ₹3,599ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
கண்ணீரிலேயே இத்தனை Variety இருக்கா?

கண்களில் இருந்து வரும் கண்ணீரில் உள்ள கெமிக்கல் நாம் எதனால் அழுகிறோம் என்பதை பொறுத்து வேறுபடுகிறதாம். அதாவது சோகத்தால் வரும் கண்ணீரில் Stress Hormone-களான Prolactin, Adrenocorticotropic hormone வெளியாகிறதாம். இவை வெளியேறுவதால், உங்கள் மனநிலை மேம்படும் என்கின்றனர். இதே, ஆனந்த கண்ணீரில் endorphin, oxytocin ஹார்மோன்கள் வெளியாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE IT.
News November 16, 2025
BREAKING: முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக முட்டை கொள்முதல் விலை ₹6-ஐ தொட்டுள்ளது. நேற்று புதிய உச்சமாக ₹5.95 ஆக உயர்ந்த நிலையில், இன்று மேலும் 5 காசுகள் அதிகரித்துள்ளது. கோழித் தீவன மூலப் பொருள்களின் விலை உயர்வே, முட்டையின் விலையேற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். கொள்முதல் விலை அதிகரிப்பால், சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹7 முதல் ₹8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது.
News November 16, 2025
பயங்கரவாதியின் வீட்டை தகர்த்ததற்கு J&K CM கண்டனம்

டெல்லி வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்திய உமரின் <<18283443>>வீட்டை தகர்த்ததற்கு<<>> ஒமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயலால் ஒருவரின் கோபம் மட்டுமே அதிகரிக்கும் எனவும், இது எதுவும் இல்லாமலேயே J&K-வில் தீவிரவாத செயல்பாடுகள் குறைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றால், அது எப்போதோ ஒழிந்திருக்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.


