News August 24, 2024
₹198 கட்டணத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் JIO

நாட்டின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான JIO, அதன் வாடிக்கையாளருக்கு பல மலிவு திட்டங்களை நடைமுறையில் வைத்துள்ளது. அதில் ₹198 குறைந்த விலை புதிய திட்டமும் ஒன்று. இத்திட்டம் 14 நாள்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 5ஜி சேவை எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 4ஜி சேவை எனில் தினமும் 2ஜிபி டேட்டாவும் வழங்குகிறது. இதுதவிர, தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பும் JIO அளிக்கிறது.
Similar News
News July 11, 2025
அறநிலையத்துறை கல்லூரிகள்: EPS விளக்கம்

கோயிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என அண்மையில் இபிஎஸ் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் பேசிய இபிஎஸ், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறை தான் அனைத்துக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் நலன் கருதியே அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர தான் சொன்னதாக விளக்கமளித்தார்.
News July 11, 2025
தனது பிராண்டுக்காக Photoshoot நடத்திய ஷ்ரத்தா

நடிகை ஷ்ரத்தா கபூர் இன்ஸ்டாவில் சிவப்பு நிற உடையில் ஒளிரும் நகைகளுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். இந்த படங்களானது Palmonas நகை பிராண்டுக்காக எடுக்கப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் 21% பங்குகள் ஷ்ரத்தாவிடம் தான் உள்ளன. அவர் அணிந்திருக்கும் நகைகள் தங்க முலாம் பூசிய வெள்ளி நகைகள் ஆகும். நடிகைகளிலேயே இன்ஸ்டாவில் அதிகம் Followers வைத்துள்ள ஷ்ரத்தா தன் பிராண்டை அங்கு பிரபலப்படுத்துகிறார்.
News July 11, 2025
குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

குஜராத் மாநிலத்தில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.