News July 28, 2024

₹1,799க்கு புதிய 4ஜி போன் அறிமுகம் செய்த ஜியோ

image

மொபைல் நெட்வொர்க் சேவையை அளிப்பது போல, மலிவு விலை 4ஜி செல்போன்களையும் ஜியோ விற்று வருகிறது. அந்த வரிசையில், JIOBHARAT J1 என்ற பெயரில் புதிய 4ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ₹2,999ஆக நிர்ணயித்துள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக ₹1,799 விலைக்கு அந்த போனை விற்பனை செய்கிறது. 2,500 Mah பேட்டரி திறனும், 2.8 இன்ச் திரையும் கொண்டுள்ளது. மெமரியை 128 ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

Similar News

News July 4, 2025

PMK கொறடா பொறுப்பிலிருந்து நீக்க முடியாது: MLA அருள்

image

பாமக கொறடா பொறுப்பிலிருந்து MLA அருளை மாற்ற வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டபேரவை செயலரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் G.K.மணி அனுமதியில்லாமல் பாமக கொறடா பொறுப்பில் இருந்து தன்னை நீக்க முடியாது என்றும், கொறடாவாக எம்.எல்.ஏ. அருளே தொடருவார் என GK மணி அளித்திருக்கக்கூடிய கடிதத்தை சபாநாயகரிடம் தான் வழங்கயுள்ளதாகவும் MLA அருள் தெரிவித்தார்.

News July 4, 2025

FLASH: க்யூட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது

image

சென்ட்ரல் யுனிவர்சிட்டி மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் UG, PG படிப்புகளில் சேருவதற்கான க்யூட்(CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியானது. <>www.nta.ac.in<<>> இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது பதிவு எண், Password-ஐ பதிவிட்டு முடிவுகளை அறியலாம். நாடு முழுவதும் கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்ற இத்தேர்வை 13.5 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

News July 4, 2025

விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு, தவெக நிர்வாகி தற்கொலை

image

விஜய்க்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புதுச்சேரி தவெக நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். விபத்தில் சிக்கியதால் TVK நிர்வாகி விக்ரம், ₹3.80 லட்சத்துக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால், பணம் கொடுத்த தனசேகரன், விக்ரம், மனைவி, குழந்தைகளை மோசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்ரம், தவெக அடையாள உறுப்பினர் அட்டையுடன் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!