News June 18, 2024
நாடு முழுவதும் ஜியோ இணைய சேவை முடக்கம்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ முடங்கியதால், அதன் பயனர்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். ஜியோ மொபைல் இணைய சேவை மட்டுமன்றி, ஃபைபர் வழி சேவையும் மொத்தமாக முடங்கியது. இதனால் பொதுவான இணைய பயன்பாடுகள் மட்டுமன்றி, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் அதிகப்படியான புகார்கள் பதிவாகியுள்ளது.
Similar News
News April 1, 2026
பரமக்குடி: கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் – EPS விமர்சனம்

பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது; ஏராளமான வரிகளை விதித்து திமுக அரசு மக்களை கடனாளியாக்கியுள்ளது. கடன் வாங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமையை திமுக வாங்கி கொடுத்துள்ளது. மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கூப்பன் திட்டம் கொள்ளையடிப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம். தொடர்ந்து பேசிய அவர் திமுக முடக்கிய திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் என்றார்.
News April 1, 2026
தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார்.. பின்னணி என்ன?

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி, பாலியல் தொல்லை அளித்ததாக அக்கட்சியின் பெண் நிர்வாகி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது. இதனிடையே, சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி தனது சகோதரி போன்றவர் எனவும், திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும் பிரகாசம் விளக்கம் அளித்துள்ளார். TNElection2026
News April 1, 2026
ஏப்ரலில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

நாளை (ஏப்ரல் 2) செவ்வாய் மீன ராசிக்குள் நுழைகிறது. ஏற்கெனவே, சூரியனும் மீன ராசியில் இருப்பதால், இந்த இரு கிரகங்களின் இணைப்பு மங்கள ஆதித்ய ராஜயோகத்தை உருவாக்குகிறதாம். இதனால், அனைத்து ராசியினர் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த 3 ராசிகளுக்கு பெரும் ஜாக்பாட் அடிக்கவுள்ளதாம். அவை எந்த 3 ராசிகள் என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை இடது புறமாக Swipe செய்யவும்.


