News April 12, 2025

20 கோடியைத் தாண்டிய ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்கள்

image

ஜியோ ஹாட்ஸ்டார் பயனர்களின் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டியுள்ளது. ஜியோவும், ஹாட்ஸ்டாரும் 2 மாதங்களுக்கு முன்பு இணைந்தன. இதையடுத்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் அது செயல்படுகிறது. ஐபிஎல் போட்டிகளையும் ஒளிபரப்புகிறது. இதனால் குறுகிய காலத்தில் 20 கோடியை கடந்த ஜியோ ஹாட்ஸ்டார், உலகில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமுக்கு பிறகு 3வது பெரிய ஓடிடியாகியுள்ளது. நீங்க என்ன ஓடிடி பார்க்கறீங்க? கமெண்ட்.

Similar News

News November 16, 2025

இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

image

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 16, 2025

இரவில் விஜய் கட்சிக்கு வந்த அதிர்ச்சி

image

SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக தவெக அறிவித்து இருந்தது. இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பந்தல் அமைத்தனர். ஆனால், போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி, பந்தல் அமைக்க இல்லை என போலீசார் கூறியதால், பந்தல் அகற்றப்பட்டது. இதையடுத்து தவெக என்றாலே போலீசார் கெடுபிடி காட்டுவதாக தொண்டர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

News November 16, 2025

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

image

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!