News April 1, 2025
ஜியோ ஹாட்ஸ்டார் இலவச ரீசார்ஜ்.. அவகாசம் நீட்டிப்பு

ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது. இதை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.299 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் ஓடிடியை 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என ஜியோ அறிவித்திருந்தது. தற்போது இந்த ரீசார்ஜ் அவகாசத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
BREAKING: 4-வது T20.. இந்தியா பேட்டிங்

இந்திய அணிக்கு எதிரான 4-வது T20-யில் டாஸ் வென்ற ஆஸி., அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. 3-வது போட்டியில் விளையாடிய அணியே தொடருகிறது. பிளேயிங் XI: அபிஷேக் சர்மா, கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஜிதேஷ், துபே, அக்சர், சுந்தர், அர்ஷ்தீப், வருண் சக்கரவர்த்தி, பும்ரா.
News November 6, 2025
திமுக, தவெக இடையேதான் போட்டி: டிடிவி

NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு 2 கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என TTV தெரிவித்துள்ளார். 2026-ல் DMK- TVK இடையேதான் போட்டி. ஆனால், அமமுகவை தவிர்த்துவிட்டு எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது எனக் கூறினார். மேலும், விஜய்யின் வருகையால் அடுத்த தேர்தலில் ADMK 3ஆவது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் EPS என்ற துரோக சக்தியை அமமுக வீழ்த்தும் எனவும் சூளுரைத்துள்ளார்.
News November 6, 2025
BREAKING: கட்சி பதவி பறிப்பு.. ஸ்டாலின் அதிரடி

சென்னையில் திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும். தோல்வி அடைந்தால், மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைவரது பதவிகளும் பறிக்கப்படும் என்று நெல்லை உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் பணியை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.


