News May 26, 2024
ஜியோ சினிமா இனி ₹299 மட்டுமே

ஜியோ சினிமா OTT தளத்துக்கான ஓராண்டு சந்தா ₹999ஆக இருந்து வந்தது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துவந்த நிலையில், அதற்கு பதிலாக சில புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு ₹299 சந்தா முறை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஒரு திரையில் மட்டுமே ஜியோ சினிமாவை காண முடியும்.
Similar News
News August 19, 2025
கம்யூ., கட்சிகளை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்: முத்தரசன்

கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சிக்கும் தகுதி இபிஎஸ்-க்கு இல்லை என சிபிஐ செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சிபிஐ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இபிஎஸ் நேர்மையாக இருந்தால் அரசியல் பேச வேண்டும். அதைவிடுத்து அவதூறு பொழியக் கூடாது என்றார். கம்யூனிஸ்ட் கட்சியை தேய்ந்து போன கட்சி என விமர்சிக்கும் அவர், கூட்டணிக்காக மட்டும் எதற்காக ரத்தினக் கம்பளம் விரிப்பதாக கூறுகிறார் என்றார்.
News August 19, 2025
ஜான் பாண்டியன் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகிறது

அதிமுக கூட்டணியில் இருக்கும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமமுக எந்த தேர்தலிலும் தனித்து போட்டியிடவில்லை. 2021-ல் ADMK கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், 2024-ல் BJP கூட்டணியில் தாமரை சின்னத்திலும் ஜான்பாண்டியன் போட்டியிட்டார். இதனால், அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய EC முடிவு எடுத்துள்ளது.
News August 19, 2025
கழுத்து வலியை விரட்ட உதவும் மர்ஜாரியாசனா!

✦கழுத்து வலி மட்டுமன்றி வயிறு தொப்பையும் குறையும்.
➥தரையில் முழங்காலிட்டு, கைகளை தோள்பட்டைக்கு நேராக வைக்கவும். முழங்கால்கள் இடுப்புக்கு நேராக இருக்க வேண்டும்.
➥மூச்சை உள் இழுத்து, முதுகை வளைத்து, வயிற்றை தரையை நோக்கி தாழ்த்தவும். தலையை மேலே உயர்த்தி, மேலே பார்க்கவும்.
➥பிறகு, மூச்சை வெளியேற்றி, முதுகை மேல்நோக்கி வளைத்து, வயிற்றை உள்ளிழுத்து, தலை & தோள்களை கீழே இறக்கவும்.